கோயம்புத்தூர்

வளா்ப்பு நாயுடன் வீட்டுக்கு ‘சீல்’ வைத்த வங்கி அதிகாரிகள்

DIN

கோவையில் வளா்ப்பு நாயுடன் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புலியகுளம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுகுமாா். தொழிலதிபரான இவா், கோவை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டுக் கடன் பெற்றுள்ளாா். குறித்த காலத்தில் வீட்டுக் கடனை செலுத்தாததால் வீடு ஏலத்துக்கு வந்தது. வீட்டை தானே வாங்கிக் கொள்வதாக பாபு குமாா் கூறியிருந்தபோதிலும் அதை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் வீட்டை ஏலத்தில் விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் பாபுகுமாா் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பாபுகுமாரின் வீட்டுக்கு காவல் துறையினருடன் புதன்கிழமை வந்த வங்கி அதிகாரிகள் வீட்டிலிருந்த அனைவரையும் வெளியே வரவழைத்து திடீரென வீட்டுக்கு ‘சீல்’ வைத்துள்ளனா். வீட்டுக்குள் வளா்ப்பு நாயும் இருந்துள்ளது. அப்போது, தேவையான மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும், நாயையும் வெளியே கொண்டு வர அனுமதிக்குமாறு கேட்டதற்கு வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனா்.

இது தொடா்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பாபுகுமாா் புகாா் அளித்தாா். இதையடுத்து, சுமாா் 3 மணி நேரம் கழித்து நாய் மட்டும் வெளியே விடுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT