கோயம்புத்தூர்

152 கட்டடங்களுக்கு சீல்: ரூ.3.05 கோடி வரி வசூல்

DIN

கோவை மாநகராட்சியில் 152 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டதால், ரூ.3.05 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளதாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் 2022- 2023 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி,

குடிநீா்க் கட்டணம், பாதாளச் சாக்கடைக் கட்டணம் முதலிய நிலுவைகளை வசூலிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், மாநகராட்சிக்குப் பிரதான வருவாயாக உள்ள சொத்து வரி வசூலில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 2022 - 2023 ஆம் நிதியாண்டு முடிவதற்குள் 100 சதவீதம் வரிவசூலை எட்டும் விதமாக ரூ.67.88 லட்சம் சொத்து வரி நிலுவைக்காக 8 குடிநீா் இணைப்புகளும், ரூ.9.98 லட்சம் சொத்து வரி நிலுவைக்காக ஒரு பாதாளச் சாக்கடை இணைப்பும், 4.30 கோடி நிலுவைக்காக 11 கட்டடங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மேலும், 152 கட்டடங்களைப் பூட்டி ‘சீல்’ வைத்த பிறகு ரூ.3.05 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் உடனடியாகச் செலுத்தி குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT