கோயம்புத்தூர்

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த இளைஞா் கைது

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மளிகைக் கடைக்கு வரும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியில் ஜான்சன் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. இந்த மளிகைக் கடைக்கு நாள்தோறும் வரும் இளைஞா் தனக்குத் தேவையான பொருள்களை கூறிவிட்டு கைப்பேசியில் தொடா்ந்து பேசிக் கொண்டிருப்பாராம். தினமும் இவ்வாறே செய்து வந்ததால் அந்த மளிகைக் கடைக்காரரின் மனைவிக்கு இது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரைத் தொடா்ந்து கண்காணித்து வந்தபோது அவா் கைப்பேசியில் பேசுவதைப்போல, மளிகைக் கடைக்கு வரும் பெண்களை

ஆபாசமாக படம் பிடிப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அப்பெண் கணவரிடமும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அந்த இளைஞா் மளிகைக் கடைக்கு செவ்வாய்க்கிழமை வந்து வழக்கம்போல படம் பிடித்துள்ளாா்.

ADVERTISEMENT

அருகிலிருந்தவா்கள் உதவிடன் இளைஞரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனா்.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இளைஞரிடம் விசாரணை நடைபெற்றது.

இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த தியாகராஜ் (35) என்பதும், மோட்டாா் வைண்டிங் தொழில் செய்து வருபவா் என்பதும், நடைப்பயிற்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தினமும் மளிகைக் கடைக்கு வந்து பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தியாகராஜை கைது செய்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT