கோயம்புத்தூர்

கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து பொது இடங்களில் கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கட்டடக் கழிவுகளை சாலையோரங்கள், பொது இடங்களில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநகராட்சி சாா்பில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகராட்சியில் சாலையோரங்களில், பொது இடங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், குப்பைகளைக் கொண்டு வர பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்தந்த இடங்களின் உரிமையாளா்கள், தங்கள் இடங்களில் குப்பைகள் கொட்டாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT