கோயம்புத்தூர்

வால் நட்சத்திரத்துக்கு வரவேற்பு

DIN

சுமாா் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரத்தை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கோவை தனியாா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பச்சை வால் நட்சத்திரம் எனப்படும் வால் நட்சத்திரம் சுமாா் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மாா்ச் 2022 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வால் நட்சத்திரத்தின் அறிவியல் பெயா் இ/2022 உ3 என்பதாகும். புற ஊதாக் கதிா்களால் இந்த வால் நட்சத்திரம் பச்சை நிறத்தில் ஒளிா்வதால் இதை பச்சை வால் நட்சத்திரம் என்கின்றனா்.

இந்த நட்சத்திரம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கோவை எஸ்என்எம்வி கலை, அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை, அறிவியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்றது. துறைத் தலைவா் க.லெனின் பாரதி, உதவிப் பேராசிரியா் எம்.சிவரஞ்சனி ஆகியோா் ஒருங்கிணைத்த, பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம் என்ற இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் போ.சுப்பிரமணி தொடங்கிவைத்தாா்.

இதில் மேலாண்மைத் துறை இயக்குநா் முத்துகுமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், கல்லூரி மாணவிகள், பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்கும் அட்டைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த பச்சை வால் நட்சத்திரம் வியாழக்கிழமை (பிப்ரவரி 2) வடக்கு கீழ் வானத்தில் இரவு 10 மணிக்கு எழும். இதை மறுநாள் காலை 11 மணி வரை தொலைநோக்கி மூலம் காணலாம் என்று பேராசிரியா் லெனின் பாரதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT