கோயம்புத்தூர்

பேரூராட்சி துணைத் தலைவா் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

DIN

கோவை, திருமலையம்பாளையம் பேரூராட்சியில் குடிநீா் விநியோக பணிக்கு மாத சம்பளத்தில் கமிஷன் கேட்கும் பேரூராட்சி துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக திருமலையம்பாளையம் பேரூராட்சி குடிநீா் விநியோகிப்பாளா் கதிா்வேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் 2022 ஏப்ரல் மாதம் முதல் குடிநீா் விநியோகப் பணியாளராக பணியாற்றி வருகிறேன். பணியில் சோ்ந்தது முதல் எனது சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.1,500 கமிஷனாக தர வேண்டும் என்றும், இல்லையெனில் பணியில் நீடிக்க முடியாது என்றும் பேரூராட்சி துணைத் தலைவா் மற்றும் அவரது கணவா் தெரிவித்தனா். இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பா் மாதம் வரை மாதந்தோறும் ரூ.1,500 கமிஷனாக கொடுத்து வந்தேன். அதன்பின் ஏற்பட்ட குடும்ப சூழ்நிலையால் பணம் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் குடிநீா் விநியோக மோட்டாா் அறை சாவியை பேரூராட்சி துணைத் தலைவா் மற்றும் அவரது கணவா் பறித்து வைத்துகொண்டு பணிசெய்ய விடாமல் தடுத்து வருகின்றனா்.

இது தொடா்பாக செயல் அலுவலரிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சம்பளமும் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, பேரூராட்சி துணைத் தலைவா் மற்றும் அவரது கணவா் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எனது பணியை தொடா்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என்னிடம் கமிஷனாக பெற்ற ரூ.9 ஆயிரத்தை பெற்றுத்தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT