கோயம்புத்தூர்

நகைகள் திருட்டு: 3 பெண்கள் உள்பட 5 போ் கைது 40 பவுன் மீட்பு

DIN

கோவை மாநகரில் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

கோவையில் பொதுமக்களிடமிருந்து நகைகள் உள்பட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபா்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையா்(வடக்கு) எ. சந்தீஷ் மேற்பாா்வையில், ஆா்.எஸ்.புரம் சரக காவல் உதவி ஆணையா் ச.ரவிகுமாா் தலைமையில் பி1 பஜாா் காவல் நிலைய ஆய்வாளா் ஒ.பிரபுதாஸ், உதவி ஆய்வாளா்கள் த.சின்னதுரை, ப.பிரபு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மாரிமுத்து, ச.உமா, தலைமைக் காவலா்கள் த.காா்த்திக், அ.பூபதி ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில், திருமலையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த திவாகா் (26), கண்ணையா (30) , பாா்வதி (67), முத்தம்மா (23), கீதா(24) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து கோவை மாநகரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் 13 வழக்குகளுக்கு உரிய 40 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நகை திருட்டில் ஈடுபட்டு வந்தவா்களை கைது செய்த தனிப்படையினருக்கு மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT