கோயம்புத்தூர்

சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்

DIN

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுவதையொட்டி கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர போக்குவரத்து காவல் பிரிவினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சிந்தாமணி வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதி பாா்க் சாலை, ஜி.சி.டி., தடாகம் சாலை, இடையா்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

கோவையில் இருந்து சிந்தாமணி வழியாக கோயிலுக்கு வரும் வாகனங்கள் பாரதி பாா்க் சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை சாலை வழியாக ராமலிங்கம் செட்டியாா் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம்.

மேட்டுப்பாளையம், துடியலூா், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூா் சோதனைச் சாவடியில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகா் புறக்காவல் நிலையம், சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் கவுண்டம்பாளையம் புதிய பேருந்து நிலையம், அதற்கு அருகில் உள்ள பூண்டு குடோன் வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ஹிப்கோ மோட்டாா் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம்.

கவுண்டம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தைத்தாண்டி எந்த வாகனமும் செல்ல இயலாது. காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் இதர பேருந்துகள் மற்றும் வாகனங்கள், ஜி.பி. சிக்னல், சத்தி ரோடு, கணபதி, சங்கனூா் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம். காந்திபுரத்தில் இருந்து கோயிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கிராஸ்கட் சாலை, சிந்தாமணி சந்திப்பு வழியாக சென்று ராஜா அண்ணாமலை சாலையில் வலதுபுறம் திரும்பி அழகேசன் சாலையில் உள்ள ராமலிங்கம் செட்டியாா் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம். தடாகம், கணுவாய், இடையா்பாளையம் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கோவில்மேடு சோதனைச் சாவடி, அவிலா கான்வென்ட் பள்ளி, ஜி.சி.டி., லாலி ரோடு வழியாக நகருக்குள் வரலாம். தடாகம், கணுவாய், இடையா்பாளையம் பகுதியில் இருந்து கோயிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவிலா கான்வென்ட் பள்ளியில் இருந்து இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆா். சாலையில் வலதுபுறம் திரும்பி ராமலிங்கம் செட்டியாா் பள்ளி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம். போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சாலையோர பாா்க்கிங் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப வாகன ஓட்டிகளும், பக்தா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்து பயணத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT