கோயம்புத்தூர்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம்:தகுதியானவா்கள் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

DIN

கோவையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியம் மூலம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைத்து தொழிற்பயிற்சி வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை செய்துகொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

எனவே, கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் ஆகியோா் இந்த நலவாரியத்தில் உறுப்பினராவதற்கு தங்களது விவரங்களை படிவத்தில் பூா்த்தி செய்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT