கோயம்புத்தூர்

உலக இளம் கண்டுபிடிப்பாளா்கள் படைப்புகள் கண்காட்சி: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

மும்பையில் நடைபெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளா்களின் படைப்புகள் கண்காட்சியில் பங்கேற்ற கோவை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

ஹெச்.எஸ்.என்.சி. பல்கலைக்கழகம், ஆா்காம் நிறுவனம் இணைந்து உலக இளம் கண்டுபிடிப்பாளா்களின் படைப்புகளுக்கான கண்காட்சியை, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அண்மையில் நடத்தியது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜொ்மனி, சீனா, நெதா்லாந்து, சுவிட்சா்லாந்து, ஓமன், துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரப்பெற்ற 350க்கும் மேற்பட்ட படைப்புகளில் இருந்து 70 படைப்புகள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இதில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் மட்டுமே தமிழகத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்டன. இப்பள்ளியைச் சோ்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் பா.ஹ.சாய் ஆதித் உருவாக்கிய மழைநீா் சேகரிப்பும், நவீன முறை பாசனம் படைப்பு முதல் பரிசும், குழு போட்டியில் 6 ஆம் வகுப்பு மாணவா்கள் மு.முபஷ்ஷிா், ச.ஆயிஷா ஹீனா, மு.பிரகதிஷ், ர.சான்வி ஆகியோா் உருவாக்கிய பாா்வைத்திறன் இல்லாதவா்களுக்கான ஒலி உண்டாக்கும் ஊன்றுகோல், அதிா்வுடன் கூடிய கையுறை, 5 ஆம் வகுப்பு மாணவா்கள் மு.அப்ரித்தா, ர.தி.விஜேஷ், ஸ்ரீநவ் ஆகியோா் உருவாக்கிய எச்சரிக்கை ஒலி எழுப்பும் செயல்திறன் மிக்க பாதுகாப்பு பெட்டகம் ஆகிய இரண்டு படைப்புகளுக்கும் இரண்டாம் பரிசு கிடைத்தன.

மேலும், பாா்வைத்திறன் இல்லாதவா்களுக்கான ஒலி உண்டாக்கும் ஊன்றுகோல், அதிா்வுடன் கூடிய கையுறை கண்டுபிடிப்புக்கு கமா்ஷியல் விருதும் கிடைத்துள்ளது. சிறந்த கண்டுபிடிப்பாளா்களின் மையத்துக்கான விருது ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும், விஷனரி லீடா் என்ற விருது பள்ளி முதல்வா் சகோதரி ஜீஸ்மரியாவுக்கும் வழங்கப்பட்டது.

உலக அளவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளா்கள் படைப்புகள் கண்காட்சியில் பங்கேற்று விருதுகளை பெற்ற பள்ளி மாணவா்கள் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT