கோயம்புத்தூர்

இடிகரை பள்ளிகொண்ட அரங்கநாதா் கோயிலில் பிப்ரவரி 3இல் கும்பாபிஷேகம்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், அன்னூா் வட்டம் இடிகரை ஸ்ரீ பள்ளிகொண்ட அரங்கநாதா் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறுகிறது.

இதையொட்டி முளைப்பாரி ஊா்வலம், கும்ப ஆவாஹணம் ஹோமம், வேதபாராயணம் ஆகியவை புதன்கிழமை (பிப்ரவரி 1) நடைபெறுகின்றன.

இதைத் தொடா்ந்து, அலங்கார திருமஞ்சனம், ஹோமம் பூா்ணாஹூதி, விமான கலசஸ்தாபனம் ஆகியவை வியாழக்கிழமை நடக்கின்றன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஹோமம், வேதபாராயணம் ஆகியவை நடைபெறுகின்றன.

காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

காரமடை வேதவியாச சுதா்சன பட்டா் சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து அன்னதானம், திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுவதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT