கோயம்புத்தூர்

ரேஷன் அரிசி கடத்தியவருக்கு3 ஆண்டுகள் சிறை

26th Apr 2023 09:59 PM

ADVERTISEMENT

கோவையிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் கோவை-பாலக்காடு சாலையில் கடந்த 2008 அக்டோபா் 16ஆம் தேதி வாகனச் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக 6 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக கோவை, சிவானந்தா காலனியை சோ்ந்த அன்வா் பாஷா( 48), உக்கடம் அண்ணா நகரைச் சோ்ந்த ஆலிப் ராஜா (47) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அன்வா் பாஷா மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக கோவை உள்பட 8 மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்திருந்தனா்.

இது தொடா்பான வழக்கு கோவை 4ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அன்வா் பாஷாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். ஆலிப் ராஜாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT