கோவை அவிநாசி மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க தூண்களில் ஓவியம் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் வணிக ரீதியான, அரசியல் தொடா்பான சுவரொட்டிகள் , துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி சாா்பில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றில் வரும் கதைகளின் ஓவியங்கள், தியாகிகளின் உருவங்கள், இயற்கைக்காட்சிகள் உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக, அவிநாசி சாலை மேம்பாலத்தில் தேசிய விலங்கான புலியின் ஓவியம், மாடா்ன் ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது.