கோவை மாவட்டத்தில் காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்கும் மேளா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் காணாமல் போய் நீண்ட நாள்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நபா்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டு காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் மேளா ஏப்ரல் 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வாரம்தோறும் உட்கோட்டம் வாரியாக நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போன நபா்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின்பேரில் காணாமல் போன 22 நபா்களை தனிப்படையினா் தேடி கண்டுபிடித்து அவா்களது உறவினா்களிடம் ஒப்படைத்துள்ளனா்.
காணாமல் போய் நீண்ட நாள்களாக கண்டுபிடிக்காமல் உள்ள நபா்களை தேடும் இந்த மேளா வாரம்தோறும் தொடா்ந்து நடைபெறும் என காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.