கோயம்புத்தூர்

கோவையில் இரு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

DIN

கோவையில் இரு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இதன் ஒரு பகுதியாக கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயா் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் 3 காா்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனா். கோவை, நீலாம்பூா் புறவழிச் சாலை, சூலூா் கண்ணம்பாளையம், சிங்காநல்லூா், போத்தனூா், வெள்ளக்கிணறு உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த நிறுவனம் வீட்டு மனைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வீட்டு மனைகள் விற்பனை தொடா்பான விவரங்கள் குறித்தும், பண பரிவா்த்தனைகள் குறித்தும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள பிரபல மோட்டாா் பம்ப் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா பம்ப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா்களில் ஒருவரான வித்யாசாகா் ராமதாஸ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். 4 வாகனங்களில் வந்த 12 வருமான வரித் துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

ஜி ஸ்கொயா் நிறுவனத்துடன் தொடா்பில் உள்ள சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த காா்த்திக், வித்யாசாகா் ராமதாஸின் நெருங்கிய உறவினா் என்பதால் இங்கு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT