கோயம்புத்தூர்

காந்தி ஜெயந்தி, மீலாது நபி: மதுக்கடைகளுக்கு விடுமுறை ஆட்சியா் அறிவிப்பு

DIN

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுபானக்கூடங்களை அடைக்க ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, அக்டோபா் 9 ஆம் தேதி மீலாது நபி பண்டிகையை முன்னிட்டும் இந்த கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி இந்த 2 தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தபட்டவா்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT