கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (செப். 30) வெளியிடப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் 38,505 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் செப்டம்பா் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று துணைவேந்தா் அறிவித்திருந்தாா்.

ஆனால், இடஒதுக்கீடு தொடா்பான சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால், பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக துணைவேந்தா் வெ. கீதாலட்சுமி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT