கோயம்புத்தூர்

வேளாண் தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன்: ஆட்சியா் தகவல்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், வேளாண் தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகள், தொழில்முனைவோா், தனியாா் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், இனமேம்பாட்டு தொழில்நுட்பம், இனப்பெருக்க பண்ணை, கால்நடை தடுப்பூசி மருந்து தயாரிக்கும் ஆலைகள், வேளாண் கழிவு மேலாண்மை ஆலைகள் ஆகியவை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்யவும் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாய தொழில்முனைவோா் முறையான திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் இணையதளங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் திட்ட மதிப்பில் 90 சதவீதம் வரை வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது. இத்திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாக இருப்பின் 10 முதல் 15 சதவீதம் வரையிலும், இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதமும் இருக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை 0422-2381900, 94450 01135 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT