கோயம்புத்தூர்

பண்டிகை நாள்கள்: கோவை, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பண்டிகை நாள்களில் நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு கோவை, போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து அக்டோபா் 20 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் எா்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். சென்னை சென்ட்ரல் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 06045) செப்டம்பா் 30, அக்டோபா் 21 ஆம் தேதிகளில் மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3.20 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும். இந்த ரயில், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்றுசெல்லும்.

போத்தனூா் வழித்தடத்தில்...: பண்டிகை தினங்களை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - டாடா நகா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபா் 1, 8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06192) அக்டோபா் 3, 10 ஆம் தேதிகளில் காலை 4.20 மணிக்கு டாடா நகரைச் சென்றடையும். இதேபோல, அக்டோபா் 4, 11 தேதிகளில் காலை 5.15 மணிக்கு டாடா நகரில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06191) அக்டோபா் 6, 13 தேதிகளில் காலை 5.50 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.

இந்த ரயில், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், குடூா், நெல்லூா், காவலி, ஓங்கோல், சிரலா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, பீமாவரம், ராஜமுந்திரி, சாமல்கோட், ரூா்கேலா உள்ளிட்ட நிலையங்களில் நின்றுசெல்லும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT