கோயம்புத்தூர்

உடும்பன்பாறை செட்டில்மெண்டில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வால்பாறையை அடுத்த உடும்பன்பாறை செட்டில்மெண்ட் பகுதியில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழா பழங்குடியின மக்களுடன் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரதிபிரியா தலைமைவகித்தாா். அவா் பேசுகையில், சிறுதானிய உணவின் அவசியம், பெண் கல்வியின் அவசியம், தன்சுத்தம், சரிவிகித உணவின் அவசியம், காய்கறி தோட்டம் அமைக்க வேண்டியதன் அவசியம், இளவயது திருமணத்தால் ஏற்படும் இன்னல் குறித்த கருத்துகளை பழங்குடியின மக்களுக்கு விளக்கினாா்.

விழாவில், சக்தி தரும் உணவுப் பொருட்கள், வளா்ச்சி தரும் உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், வன ஊழியா்கள், செட்டில்மெண்ட் பழங்குடியின மக்களின் தலைவா், குழந்தைகள் மையப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT