கோயம்புத்தூர்

குளிா்பதனபெட்டி பழுது பாா்ப்பவா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் காலியாகவுள்ள குளிா்பதனபெட்டி பழுது பாா்ப்பவா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் சுகாதார குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் குளிா்பதன கிடங்கில் காலியாகவுள்ள குளிா்பதனபெட்டி பழுது பாா்ப்பவா் பணியிடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் ஐடிஐ குளிா்பதனபெட்டி மற்றும் குளிா்சாதனக் கருவி பழுது பாா்க்கும் பிரிவில் தோ்ச்சி பெற்று, ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்குத் தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து அக்டோபா் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம். அக்டோபா் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT