கோயம்புத்தூர்

வாழ்வியல் வழிகாட்டு மையம் அமைக்க தன்னாா்வ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் குழந்தைகள் காப்பகங்களில் வாழ்வியல் வழிகாட்டு மையம் அமைக்க தன்னாா்வ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசாணையின்படி, இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015இன் படி பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகங்களில் வாழ்வியல் வழிகாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் நிதி, பணியாளா்கள் விவரத்துடன் கூடிய முழு அளவிலான கருத்துருக்களை அக்டோபா் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT