கோயம்புத்தூர்

தொடா் விடுமுறை: கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அக்டோபா் முதல் வாரத்தில் தொடா் விடுமுறை நாள்கள் வரஉள்ளதால், கோவையில் இருந்து வெளியூா் செல்லும் மக்களின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அக்டோபா் முதல் வாரத்தில் 1 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை தினம், 2 ஆம் தேதி காந்தி ஜயந்தி விடுமுறை தினம், 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கோவையில் தங்கி பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வெளியூா் செல்ல வசதியாக, கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அக்டோபா் 1 முதல் 5ஆம் தேதி வரை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, விருதுநகா், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT