கோயம்புத்தூர்

உலக காதுகேளாதோா் வார விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காதுகேளாதோா் வாரம் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் செப்டம்பா் இறுதி வாரம் உலக காதுகேளாதோா் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், குழந்தையின் கேட்கும் திறன் குறித்து பிறந்த உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பிறவியிலே செவித்திறன் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் கேட்கும் திறனையும், பேசும் திறனையும் பெற முடியும். கோவை அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 240 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடா்ந்து காக்ளியா் இம்பிளான்ட் கருவி பராமரிப்புக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றாா்.

ஊா்வலத்தில் மருத்துவ மாணவா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி சென்றனா். நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறைத் தலைவா் சலீம் அலி, மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT