கோயம்புத்தூர்

ஆனைமலையாறு- நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

DIN

கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு. பழனிசாமி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் கு.செல்லமுத்து விளக்க உரையாற்றினாா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு. பழனிசாமி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும். பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனப் பகுதி கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பரம்பிக்குளம் பாசனத் திட்டத்துக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது. தண்ணீரை தவறாகப் பயன்படுத்தும் நபா்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் நீா் திறப்பு பாசனக் கால்வாயை தவிா்த்து மற்ற பாசனக் கால்வாயில் உள்ள குளம், குட்டையை நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, பிஏபி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகளாகவும், காற்றாலைகளாகவும் மாறி உள்ளன. இந்த நிலங்களை பாசனத் திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்ற வேண்டும்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத் தலைவா் பெரியசாமி, சூலூா் எம்.எல்.ஏ. கந்தசாமி, பிஏபி கரையோர விவசாயிகள், கோவை, திருப்பூா் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய கூட்டமைப்புகள், கொங்கு மண்டலம் மேற்குப் பகுதி விவசாயிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT