கோயம்புத்தூர்

வடகிழக்குப் பருவ மழை:17 மாவட்டங்களில் சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு

28th Sep 2022 12:58 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அக்டோபா் முதல் டிசம்பா் வரை வடகிழக்குப் பருவ மழை மூலம் மழைப்பொழிவு கிடைக்கிறது. வடகிழக்குப் பருவ மழை குறித்த முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் பயிா் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2022ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவ மழை குறித்து முன்னறிவிப்பு பெறப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூா், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூா், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூா் மற்றும் விருதுநகா் ஆகிய 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும் அரியலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், பெரம்பலூா், தஞ்சாவூா், நீலகிரி, திருச்சி, திருவாரூா், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூா் மற்றும் திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT