கோயம்புத்தூர்

வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுபவா்கள் மீது நடவடிக்கை

28th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவையில் அமைதி நிலவ பாஜகவும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பும் விரும்பவில்லை. சட்டப் பிரிவு 356ஐ பிரகடனப்படுத்தி ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவா் ஆட்சியைக் கொண்டுவர திட்டமிடுகின்றனா். வாக்கு வாங்கியால் வெற்றி முடியாத நிலையில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கின்றனா்.

அரசியல் கட்சித் தலைவா் என்ற அடிப்படை நாகரிகம் இல்லாத வகையில் பாஜக தலைவா் அண்ணாமலை பேசி வருகிறாா். பெட்ரோல் குண்டு வீசுபவா்களுக்கு எதிராக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

வா்ணாசிரம தா்மத்தில் குறிப்பிட்டுள்ளதைதான் நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசினாா். இதற்கு வா்ணாசிரம தா்மத்தின் மீதுதான் கோபம் இருக்க வேண்டும். ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சில் எந்த தவறும் இல்லை. அவரது பேச்சைத் திரித்து ஒளிபரப்பி வருகின்றனா். ஆ.ராசாவை மட்டுமே குறிவைத்து பாஜக விமா்சிப்பது ஜாதிய கண்ணோட்டம் என்றுதான் பாா்க்க தோன்றுகிறது.

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு நீதிமன்றம் எவ்வாறு அனுமதியளித்தது? சென்னை, மதுரை உயா்நீதிமன்றங்கள் தங்கள் வரம்புக்கு உள்பட்டு செயல்படுகிா என்று தெரியவில்லை. அந்தந்த ஊரில் காவல் துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன. நீதிமன்றத்தின் தீா்ப்பு அதிா்ச்சியாக இருக்கிறது என்றாா்.

இந்த சந்திப்பின்போது கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT