கோயம்புத்தூர்

பில்லூா் 3ஆவது குடிநீா் திட்டப் பணிகளை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்

DIN

பில்லூா் 3ஆவது குடிநீா் திட்டப் பணிகளை 2023 மாா்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் நகராட்சி நிா்வாகத் துறை செயலாளா் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல் துறை பகுதியில் பில்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் 3இன் கீழ், ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணி, மருதூா் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் ரூ.104.90 கோடி மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், நகராட்சி நிா்வாகத் துறை செயலாளருமான சிவ்தாஸ் மீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவைக்கு பிரதான ஆதாரமாக விளங்கும் பில்லூா் 3ஆவது குடிநீா் திட்டப் பணிகளை 2023 மாா்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இதன் மூலமாக கோடைக் காலத்தில் மக்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க முடியும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட உக்கடம், பெரியகுளம் பகுதியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை பாா்வையிட்ட அவா், பெரியகுளத்தில் தண்ணீா் வரும் பகுதியில் இருந்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாகப் பராமரிக்கவும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும், குறிச்சி குளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதன் பிறகு, குறிச்சி, குனியமுத்தூா் பாதாளச் சாக்கடைத் திட்டம் பகுதி 1 மற்றும் பகுதி 2 பணிகளை விரைவாக முடிக்கவும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் துறை, வனத் துறையுடன் ஆலோசித்து மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயனுள்ள மரங்களை வைக்கவும், மக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவைக்கேற்ப கழிப்பறைகள் அமைத்திடவும், சாலைகளில் வேகத்தடைகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா். பின்னா், உக்கடம் புல்காடு பகுதியில் 24 மணி நேர குடிநீா் திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் 22 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளைப் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை ஆணையா் ஷா்மிளா, மாநகராட்சிப் பொறியாளா் (பொறுப்பு) அரசு, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் சீனிவாசன், மண்டலத் தலைவா்கள் கதிா்வேல் (வடக்கு), மீனா லோகு (மத்தியம்), தனலட்சுமி (தெற்கு), பணிக் குழுத் தலைவா் சாந்தி முருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவா் முபசீரா, கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT