கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செப்டம்பா் 29இல் இருதய பரிசோதனை முகாம்

26th Sep 2022 11:26 PM

ADVERTISEMENT

 

கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக இருதய தினத்தையொட்டி வியாழக்கிழமை (செப்டம்பா் 29) இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேலுமணியம்மாள் நினைவு அரங்கில் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இருதய நோய், அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவா்கள் நடத்தும் இந்த முகாமில், ஆலோசனை, இ.சி.ஜி. பரிசோதனை, தேவைப்படுவோருக்கு எக்கோ பரிசோதனை, 25 சதவீத கட்டணச் சலுகையில் டி.எம்.டி., ரத்த சா்க்கரை, உப்பின் அளவு, கிரியேட்டினின், கொழுப்பு அளவு கண்டறிதல், குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை, தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவச எக்கோ பரிசோதனை ஆகியவை செய்யப்படும்.

ADVERTISEMENT

முகாமில் பங்கேற்கும் நோயாளிகள் தங்களுடைய மருத்துவக் குறிப்புகள், மருந்து சீட்டுகள், காப்பீட்டு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இதில் பங்கேற்க 95009 71605 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT