கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் 2,355 போ் தாய்ப்பால் தானம்

26th Sep 2022 11:28 PM

ADVERTISEMENT

 

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கிக்கு நடப்பு ஆண்டில் 2344 போ் தாய்ப்பால் தானம் அளித்தன் மூலம் 5,511 குழந்தைகள் பயனடைந்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2015ஆம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது.

தாய்ப்பால் தானம் குறித்து அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஆண்டுதோறும் தாய்ப்பால் தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கையும், பயனடைபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனா். இதன் மூலம் 5,511 குழந்தைகள் பயனடைந்துள்ளனா். இந்த தாய்ப்பால் வங்கி மூலம் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான, ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைத்து வருவதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாப்பால் வங்கி மூலம் நாள்தோறும் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் பராமரிக்கப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள், குறைப் பிரசவத்தில் குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், பாலூட்ட முடியாத தாய்மாா்களின் குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது. மேலும், தனியாா் மருத்துவமனைகளில் பிரசவமாகி தாய்ப்பால் பற்றாக்குறை காணப்படும் குழந்தைகளுக்கும் இங்கிருந்து தாய்ப்பால் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT