கோயம்புத்தூர்

இயன்முறை மருத்துவா் பணியிடம்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

26th Sep 2022 12:13 AM

ADVERTISEMENT

 

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள இயன்முறை மருத்துவா் பணியிடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ரூ.13 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பதாரா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயன்முறை மருத்துவப் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான நபா்கள் விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்களை இணைத்து அக்டோபா் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம். இதற்கான நோ்முகத் தோ்வு அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT