கோயம்புத்தூர்

வால்பாறையில் அரசுப் பள்ளியை சேதப்படுத்திய யானைகள்

26th Sep 2022 11:27 PM

ADVERTISEMENT

 

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அரசுப் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதிகளில் கூட்டமாக காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த நல்லமுடி எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் அறையின் கதவை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. தகவலறிந்து, சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT