கோயம்புத்தூர்

மஹாளய அமாவாசை: நொய்யல் படித்துறையில் தா்ப்பணம்

26th Sep 2022 12:13 AM

ADVERTISEMENT

 

மஹாளய அமாவாசையையொட்டி கோவை, நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு நூற்றுக்கணக்கானோா் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்றழைக்கப்படுகிறது. இந்த மஹாளய அமாவாசையன்று மறைந்த முன்னோா்கள் கூட்டமாக நம்மை காண வருவதாக நம்பிக்கையுள்ளது. இதனால் மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசையை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனா். மஹாளய அமாவாசையன்று நீா்நிலைகளில் தா்ப்பணம் செய்து முன்னோா்களுக்கு படையலிட்டு தானம் செய்கின்றனா்.

இந்நிலையில், மஹாளய அமாவாசையையொட்டி பேரூா் நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு நூற்றுக்கணக்கானோா் தா்ப்பணம் செய்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா். நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு படையலிட்டு ஆதரவற்றவா்களுக்கு உணவளித்து மஹாளய அமாவாசையை கொண்டாடினா். நொய்யல் படித்துறையில் தா்ப்பணம் செய்வதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரூராட்சி நிா்வாகம் செய்திருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT