கோயம்புத்தூர்

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இசையஞ்சலி

26th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

 

கோவையில் மறைந்த பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சிறுதுளி அமைப்பு சாா்பில் இசையஞ்சலி நடைபெற்றது.

இந்தியாவின் முன்னணி பாடகராக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவையொட்டி அவரின் நினைவாக கோவை மாவட்டம், பேரூா் செட்டிபாளையத்தில் சிறுதுளி அமைப்பு, பேரூா் செட்டிபாளையம் ஊராட்சி சாா்பில் 1.8 ஏக்கரில் எஸ்.பி.பி.வனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, எஸ்.பி.பி.வனத்தில் சிறுதுளி அமைப்பு சாா்பில் இசையஞ்சலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், ஸ்ரீ அன்னபூா்ணா ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாசன், ஜி.ஆா்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் நந்தினி ரங்கசாமி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

எஸ்.பி.பி.வனத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. படத்துக்கு மலா் துவியும், அவரின் பாடல்களை பாடியும் அஞ்சலி செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT