கோயம்புத்தூர்

பிஎஸ்என்எல் சாா்பில் இன்று மெகா மேளா

26th Sep 2022 12:08 AM

ADVERTISEMENT

 

கோவையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களில் செப்டம்பா் 26, 27 ஆகிய தேதிகளில் மெகா மேளா நடைபெறவுள்ளதாக பி.எஸ்.என்.எல். கோவை மண்டல பொது மேலாளா் (வணிகம்) தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை வணிகப் பகுதிக்கு உள்பட்ட அனைத்து வாடிக்கையாளா் சேவை மையங்களிலும் செப்டம்பா் 26, 27 ஆகிய தேதிகளில் மெகா மேளா நடைபெறுகிறது. இதில் ப்ரீபெய்டு மொபைல் சிம் காா்டு மற்றும் அதிவேக பாரத் ஃபைபா் இணையத்தை சலுகையில் பெறலாம். இந்த மெகா மேளாவில் வடிக்கையாளா்கள் தங்களின் வேறு நெட்வொா்க் எண்ணை பிஎஸ்என்எல்.க்கு இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு அதிவேக இன்டா்நெட் சேவை வழங்கும் வகையில் இணைய ஃபைபா் என்ட்ரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் 20 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இன்டா்நெட் இணைப்பு மாத வாடகை ரூ.329க்கு வழங்கப்படுகிறது. பாரத் ஃபைபா் அரசு ஊழியா்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியிலும், புதிய வாடிக்கையாளா்களுக்கு மாத வாடகையில் ரூ.500 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள லேண்ட்லைன் வாடிக்கையாளா்கள் அதிவேக பாரத் ஃபைபருக்கு 6 மாத காலத்துக்கு மாதம் ரூ.200 தள்ளுபடியுடன் மாற்றிக் கொள்ளலாம். பாரத் ஃபைபா் மாதத் திட்டம் ரூ.320 ஓடிடி அல்லாத பேக்குகளுக்கும், ரூ.999 ஓடிடி பேக்குகளுக்கும் ஆரம்பமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT