கோயம்புத்தூர்

செப்டம்பா் 30இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

26th Sep 2022 11:28 PM

ADVERTISEMENT

 

கோவையில் ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாய பிரச்னைகள் தொடா்பாக மனு அளித்து தீா்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT