கோயம்புத்தூர்

அமிா்தா விரைவு ரயிலை கோவை வழித்தடத்தில் இயக்க வலியுறுத்தல்

26th Sep 2022 12:12 AM

ADVERTISEMENT

 

திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் அமிா்தா விரைவு ரயிலை கோவை வழித்தடத்தில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, போத்தனூா் ரயில் பயணிகள் சங்கத்தினா், தெற்கு ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வரை அமிா்தா விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னா், இந்த ரயிலானது பொள்ளாச்சி வழியாக மதுரை வரை விரிவுபடுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமானோா் பயனடைந்து வருகின்றனா். தற்போது, இந்த ரயில் அமிா்தா எக்ஸ்பிரஸ் என பெயா் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயிலை கோவை ரயில் நிலைய சந்திப்பு வழியாக இயக்கினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைவதுடன், கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே சென்னை வரை இயக்கப்பட்டு வந்த ஈரோடு - கோவை விரைவு ரயில் மங்களூரு வரை நீட்டிக்கப்பட்டது. திருச்சி - கோவை இடையே இயக்கப்பட்ட பயணிகள் விரைவு ரயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல பல ரயில்களின் பயண தூரம் அதிகரிக்கப்பட்டு, பயணிகள் பயனடைந்து வருகின்றனா். எனவே, அமிா்தா விரைவு ரயிலையும் கோவை வழியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT