கோயம்புத்தூர்

பொது மக்களுக்குப் பாதுகாப்பு: எம்.பி. தலைமையில் பல்வேறு கட்சியினா் ஆட்சியரிடம் மனு

25th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

 

கோவையில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி ெச்யய வலியுறுத்தி எம்.பி. பி.ஆா்.நடராஜன் தலைமையில் பல்வேறு கட்சியினா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பாஜக அலுவலகம், இந்து முன்னணி பிரமுகா்களின் வீடுகள், காா்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கடந்த இரண்டு நாள்களாக பொது மக்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளனா். இந்நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா். நடராஜன் தலைமையில் பல்வேறு கட்சியினா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கைகளால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தற்போது, பொது மக்களுக்கு அமைதியான சூழல் வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியா், காவல் துறையினா் அனைவரும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஆறுமுகம், மதிமுக நிா்வாகி சேதுபதி, தபெதிக தலைவா் கு.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் ஜோ.இலக்கியன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT