கோயம்புத்தூர்

மிரட்டல் விடுத்ததாக வேலூா் இப்ராஹிம் போலீஸில் புகாா்

25th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

 

வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்ததாக கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

இது குறித்து கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அவா் புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

நான் பாஜகவில் தேசிய செயலாளா் பதவி வகித்து வருகிறேன். இதையொட்டி, பல்வேறு தரப்பு மக்களை சந்தித்துப் பேசி வருகிறேன். இந்நிலையில், சென்னையில் இருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்தேன். கணபதியில் தங்கியிருந்தபோது, எனது கைப்பேசிக்கு வாட்ஸ்அப் எண்ணுக்கு குரல் பதிவு ஒன்று வந்தது. அதில், மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. எனக்கு இந்தப் பதிவை அனுப்பி மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT