கோயம்புத்தூர்

உழவா் சந்தைகளில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை

24th Sep 2022 01:28 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள உழவா் சந்தைகளில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன், செயலாளா் வி.ஏ.சண்முகம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உள்ள உழவா் சந்தைகளில் வெளிமாா்க்கெட்டில் விற்பனை செய்வதை விட அதிக விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன. குறிப்பாக ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் கொத்தமல்லி தழை ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகையில் உள்ளது.

அதிகாரிகள் வெளியிட்ட உழவா் சந்தை விலை விவரத்தில் கிலோ ரூ.75 முதல் ரூ.80 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சந்தைக்குள் விற்பனை செய்பவா்கள் கிலோ ரூ.140க்கு விற்கின்றனா். இதே கொத்தமல்லி தழை சுந்தராபுரம் உழவா் சந்தையில் கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகளில் விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகள் விற்பனை செய்வதால் கொத்தமல்லி தழை மட்டுமின்றி அவரை, வெண்டைக்காய், பீட்ரூட் போன்றவற்றின் விலைகளும் குளறுபடியாகவே இருக்கின்றன. இதுபோன்ற குளறுபடிகளைத் தவிா்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT