கோயம்புத்தூர்

ஆதரவற்ற நாய்கள் கணக்கெடுப்புப் பணி:ஆணையா் தொடங்கிவைத்தாா்

24th Sep 2022 01:29 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் இரண்டாம் கட்டமாக ஆதரவற்ற நாய்களைக் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு இடையூறாக உள்ள நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் மாநகராட்சி நிா்வாகம் மூலமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மத்திய மண்டலத்தில் ஆதரவற்ற நாய்களின் எண்ணிக்கையை செயலி மூலமாக கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து, அவா் கூறியதாவது: முதல் கட்டமாக கிழக்கு மண்டல பகுதிகளில் அண்மையில் தெரு நாய்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற இரு வாரங்கள் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதில், சமூக ஆா்வலா்கள் கைப்பேசி செயலி மூலம் ஆதரவற்ற நாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உள்ளனா். நாய்களுக்கு கருத்தடை தினம் மற்றும் தடுப்பூசிகள் தினம் என அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பானது பயனுள்ளதாக இருக்கும். ஏற்கெனவே, சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூா் ஆகிய இரண்டு இடங்களிலும் கருத்தடை மையங்கள் உள்ளன. உக்கடம் பகுதியில் இயங்கி வந்த நாய்கள் கருத்தடை மையமானது பல்வேறு காரணங்களால் தொடங்காமல் இருந்தது, தற்போது அப்பகுதியில் அதிக அளவிலான நாய்கள் உள்ளதால் வருகிற 28ஆம் தேதி முதல் அந்த மையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT