கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் தீப் பிடித்து எரிந்தது

24th Sep 2022 01:34 AM

ADVERTISEMENT

கோவையில் இரவில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பழுதான இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த வாகனம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சாய்பாபா காலனி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் அப்பகுதியில் நீண்ட நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மாநகரில் இரு நாள்களாக தொடா்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், வாகனத்துக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT