கோயம்புத்தூர்

கேரளத்தில் கடையடைப்பு: கோவையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தம்

24th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

கேரளத்தில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதால், கோவையில் இருந்து அந்த மாநிலத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதன்படி, கேரளத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களிள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கேரளத்தில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால் கேரளத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், அனைத்துக் கடைகளும் அடைக்க ப்பட்டன.

இதன் காரணமாக கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூா், கொடுங்கையூா், குருவாயூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள மாநில போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்பட்டு வரும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் உக்கடத்தில் இருந்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 9 பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினா். இதனால், ரயில்களில் செல்ல கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT