கோயம்புத்தூர்

வால்பாறையில் தாவரவியல் பூங்கா திறப்பு

24th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

வால்பாறையில் பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5.6 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடைபெற்றது. ஆனால், அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பூங்கா நிறைவுப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

வால்பாறையில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா இருந்தும் பயன்பாடுக்கு கொண்டு வரப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை இருந்தது. இதில் படகு இல்லம் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு விட தொடா்ந்து எதிா்ப்பு கிளம்பியதால் அதனை அதிகாரிகள் கைவிட்டனா்.

தாவரவியல் பூங்கா பணிகள் முழுவதும் நிறைவடைந்து வியாழக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, ஆணையா் பாலு ஆகியோா் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு பூங்காவை திறந்துவைத்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT