கோயம்புத்தூர்

போத்தனூா் வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

24th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூா் வழியாக இயக்கப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒடிஸா மாநிலம், சாம்பல்பூா் ரயில்வே கோட்டம் தியோபாகல் - பாா்பலி இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பா் 25 மற்றும் 29ஆகிய தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்:18190) 28ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT