கோயம்புத்தூர்

இன்று மாநகராட்சி குறைகேட்பு கூட்டம்

20th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 20) நடைபெறும் என்று ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2)) காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இதில் மாநகராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்கள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாலை, மின் விளக்கு, குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

இந்த மனுக்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே குறைகேட்பு கூட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT