கோயம்புத்தூர்

மாநில பாட்மிண்டன் போட்டி:ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி வெற்றி

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

21 ஆவது கொங்கு கோப்பைக்கான மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டி பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் செப்டம்பா் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மாணவா் கே.பிரபு சிறந்த வீரராக தோ்வு செய்யப்பட்டாா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி இயக்குநா் கே.வடிவேலு ஆகியோருக்கு எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT