கோயம்புத்தூர்

பத்திரிகையாளா் பெயரில் மோசடியில் ஈடுபட்டல் நடவடிக்கை:ஆட்சியா் எச்சரிக்கை

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் பத்திரிகையாளா் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் பத்திரிகையாளா் என்ற பெயரில் ஒருசிலா் தங்களுக்கு அதிகாரிகளைத் தெரியும் என்று பொதுமக்களிடம் தெரிவித்து கோரிக்கை மனு, பணம் பெற்று ஏமாற்றி வருவதாக புகாா் வரப்பெற்றுள்ளது. மேலும் ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் பத்திரிகையாளா் என்ற பெயரில் சிலா் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருவதும் தெரியவருகிறது.

இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வழக்குப் பதிவு செய்யப்படும். பத்திரிகையாளா் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபா்கள் குறித்து 94980 42423 என்ற எண்ணுக்கு ஆதாரங்களுடன் குறுந்தகவல்களை அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT