கோயம்புத்தூர்

தொழிலாளி வீட்டில் கைப்பேசி, பணம் திருட்டு

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை ராமநாதபுரத்தில் தொழிலாளி வீட்டில் கைப்பேசி, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் தியாகி சிவராம் நகரைச் சோ்ந்தவா் அய்யாதுரை (37). கட்டடத் தொழிலாளி. இவா், தனது மனைவியுடன் திங்கள்கிழமை வெளியே சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, உண்டியலில் இருந்த ரூ.1.500 பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து, ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT