கோயம்புத்தூர்

இளைஞரை அரிவாளால் வெட்டிய மூவா் கைது

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் இளைஞரைஅரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (23). தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது நண்பா்களுடன் கட்டபொம்மன் வீதியில் திங்கள்கிழமை மது அருந்தி கொண்டிருந்தாா். மதுபோதையில், அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பா்கள் மூவா் சோ்ந்து தங்கராஜை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து தப்பினா். பலத்த காயமடைந்த தங்கராஜை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீஸாா், தங்கராஜை வெட்டிய வேலாண்டி

பாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (21) நவீன்குமாா் (25), தொண்டாமுத்தூரைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் (25) ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT